வெயிலால் மண்டை காய்ந்து ஏற்படும் சிறுநீரக பாதிப்பை சரி செய்யும் இளநீர், சுரைக்காய் ஜூஸ்.! - Seithipunal
Seithipunal


சுரைக்காய் ஜூஸ் மற்றும் இளநீர் சிறுநீரக தொற்றுகளை சரி செய்யும். இரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவை பராமரித்து, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். சிறுநீரகம் மற்றும் ஈரலை பாதுகாக்கும். மூச்சுத்திணறல் பிரச்சனையை சரி செய்யும். அந்த வகையில், இன்று சிறுநீரக தொறுகளை சரி செய்யும் இளநீர், சுரைக்காய் ஜூஸ் செய்வது எப்படி என காணலாம். 

சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.

இளநீர், சுரைக்காய் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - ¼ கிலோ,
புதினா - சிறிதளவு,
இளநீர் - 200 மி.லி,

இளநீர், சுரைக்காய் ஜூஸ் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட சுரைக்காயின் மேற்கோளை நீக்கி, பின்னர் நறுக்கி மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். சுரைக்காயுடன் புதினா இலைகளையும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். பின்னர் இளநீரை சேர்த்து வடிகட்டி, தேவையான அளவு சிறிது உப்பு அல்லது சீனி சேர்த்து குடிக்கலாம். 

குறிப்பு: 

இந்த இளநீர், சுரைக்காய் ஜூஸ் குளிர்ச்சி தன்மையை கொண்டது என்பதால், சளி பிரித்துள்ளவர்கள் இதனை குடிக்க வேண்டாம். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் குறைந்த அளவில் குடிக்கலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Suraikai and Ilaneer or Coconut Water and bottlegourd Juice Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal