வெற்றிலையால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


நமது இயற்கை மருத்துவத்தில் பல வகையான பயனை தரும் இலைகள் உள்ளது. அதில் எளிய மருத்துவத்தில் முதல் இலையாக இருப்பது வெற்றிலை ஆகும். இந்த வெற்றிலை இதய வடிவிலும், நுனி கூறாகவும் இருக்கும். 

வெற்றிலையை சாப்பிட்டால் சீதளம் நீக்கும், உடலுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும், அழுகளை அகற்றும், உமிழ்நீர் அதிகளவு சுரக்கும், பசியின்மை பிரச்னையை சரிசெய்யும், தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும், காமத்தினை அதிகரிக்கும். 

நாடி நரம்புகளை உரமாக்கி, வாயில் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தினை சரியாக்கும். வெற்றிலையின் சாறு சிறுநீரை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. வெற்றிலை சாறுடன் நீர் கலந்த பாலினை குடித்து வந்தால், சிறுநீர் நன்றாக பிரியும். 

வெற்றிலையை கடுகு எண்ணெய்யுடன் சூடு செய்து மார்பக பகுதியில் கட்டிவைத்து வந்தால், மூச்சுத்திணறல் மற்றும் இரும்பல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். குழந்தைகளுக்கு ஏற்படும் சுரத்திற்கு வெற்றிலை சாறுடன் கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து கொடுக்க சரியாகும். 

சளி மற்றும் இருமல், மாந்தம், இழுப்பம் போன்ற பிரச்சனையும் சரியாகும். வெற்றிலையை வெப்ப அனலில் வாட்டி, இதனுடன் ஐந்து துளசி இலையை சேர்த்து சாறெடுத்து, 10 மாத குழந்தைக்கு காலை மற்றும் மாலை வேளையில் 10 துளிகள் கொடுத்தால் சளி மற்றும் இருமல் பிரச்சனை சரியாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போட்டாலும் சளி சரியாகும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கல் பிரச்னையை சரிசெய்ய, வெற்றிலை காம்பை ஆமணக்கு எண்ணெய்யில் தேய்த்து ஆசன வாயில் செலுத்தினால் உடனடியாக மலம் கழியும். வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெய்யை தடவி, சூட்டில் வாட்டி சீழ் கட்டிகளின் மீது வைத்தால், கட்டிகள் உடைந்து சீழ்கள் வெளியாகும். வெற்றிலையை சிறிதளவு மென்று வந்தால் குரல் வளம் மேம்படும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Betel leafs or Vetrilai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->