சமையலுக்கும், அழகுக்கும் இனி தனித்தனியே செலவு செய்ய வேண்டாம்!! வீட்டில் உள்ள பொருட்களை, வைத்தே அழகை பெறுவது எப்படி? - Seithipunal
Seithipunal


வீட்டு வேலை செய்தே தேய்ந்து போகும், பல பெண்களுக்கு பார்லர் சென்று அழகு படுத்தி கொள்வது என்பது இயலாத காரியம். நேரமின்மையும், சோம்பலும் தான் காரணம் என்றாலும், தேவையற்ற செலவு என அதனை நினைத்து ஒதுக்கும் பெண்களும் உண்டு. அவ்வாறு எண்ணம் கொண்ட பெண்களுக்கு 'வீட்டு சமயலறையில் உள்ள பொருட்களை கொண்டு  சரும அழகை மேம்படுத்துவது எப்படி' என பார்ப்போம். இதனால், செலவும் மிச்சம், பக்க விளைவுகள் வருமோ? என்ற பயமும் இருக்காது.

தயிர்: இது ஏராளமான சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இது, நமது சருமத்துக்கு மிகச்சிறந்த மாய்ச்சரைஸராகும் கரும்புள்ளிகளைப் போக்க இதனை பயன்படுதலாம். தலைமுடியை மிருதுவாக வைத்திருக்கவும், பொடுகுத்தொல்லையை நீக்கவும் பயன்படுத்தலாம்.

கடலைமாவு: இது தலைமுடி மற்றும் முகம் இரண்டிற்கும் அழகு சேர்க்கும் ஆற்றல் கொண்டது. கடலைமாவுடன் மஞ்சள் தூள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறுக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்புடன் இருப்பதை நீங்களே உணரமுடியும்.

கொண்டைக்கடலை: இதில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் சேர்த்து நன்மை பயக்கும் தன்மை கொண்டது. கடலையை அரைத்து முகத்தில் பூசி சிறிது காயவைத்து, கழுவாமல் ஈரத்துணியை வைத்து துடைத்து எடுக்கவும். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.


புளி: இது சருமத்தின் நிறத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வைக்கும். புளியை நன்கு பேஸ்ட் போல கரைத்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மிதமான வெப்பத்துடன் முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி3 சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்திருக்கும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும். புளியைக் கரைத்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தினால் தலைமுடியை வேகமாக வளரும். பொடுகு தொல்லையும் நீங்கும்.

எலுமிச்சை: இதை, சாறு பிழிந்து எடுத்து நீருடன் கலந்து அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும். ஒருபோதும் எலுமிச்சையை தனியாக உபயோகிக்க வேண்டாம். அதிலுள்ள அமிலம் எரிச்சலை உண்டாக்கும்.

தேன்: இது, எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால், தேனை தயிர், லெமன், கடலைமாவு, தக்காளி, ஓட்ஸ் என எதாவது ஒன்றுடன் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

ஓட்ஸ்: ஓட்ஸை தேன் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் மாஸ்க் போட்டு, அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் பளிச்சென ஜொலிப்பதை உடனே உணரமுடியும்.

அழகைப் பராமரிக்க தனியே மெனக்கெடாமல் நாம் வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் பொருள்களையே அதற்கும் பயன்படுத்தினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். 

English Summary

beauty tips with home ingredients


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal