இன்றைய பஞ்சாங்கம்: சித்தயோகம் நாளில் சிறப்பு தரிசனங்கள் – உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது? - Seithipunal
Seithipunal


இன்றைய பஞ்சாங்க தகவல்கள்

அசுப / சுப நேரங்கள்
ராகுகாலம்: பிற்பகல் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8.00 – 9.00 | மாலை 5.00 – 6.00
விசுவாவசு ஆண்டு – தை மாதம் 20 | செவ்வாய்க்கிழமை
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை பின்னிரவு 2.59 மணி வரை; பின்னர் திருதியை
நட்சத்திரம்: மகம் நள்ளிரவு 12.24 மணி வரை; அதன் பின் பூரம்
யோகம்: சித்தயோகம்
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆரோக்கியம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – அமைதி
கடகம் – செலவு
சிம்மம் – வரவு
கன்னி – கடமை
துலாம் – தாமதம்
விருச்சிகம் – ஜெயம்
தனுசு – ஆதரவு
மகரம் – வெற்றி
கும்பம் – ஆக்கம்
மீனம் – சுபம்


இன்றைய கோவில் விழாக்கள் & சிறப்பு வழிபாடுகள்
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெறுகின்றன.
சென்னை ஸ்ரீ சிங்காரவேலவர் மற்றும் திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் கோவில்களில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். திருத்தணியில் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், சுவாமிமலையில் தங்கப்பூமாலை அலங்காரம் நடைபெறும்.
ஸ்ரீ வாஞ்சியம் முருகன், குரங்கணி முத்துமாலையம்மன் ஆகியோருக்கு பவனி நடைபெறுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம், திருநறையூர் சித்தநாதீசுவரர் கோவிலில் சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல் உள்ளிட்ட பல ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
மேலும், திருநெல்வேலி அருகிலுள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை மற்றும் திருப்பதி ஏழுமலையப்பன் சமஸ்தான மண்டப எழுந்தருளல் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Almanac Special darshans Siddha Yoga day What do your horoscope predictions say


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->