அதிமுகவின் முக்கிய தலைவர் திமுகவில்?! தோல்வியில் முடிந்த சமாதான முயற்சி! அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லட்சுமணன் இன்று திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் ராஜ்யசபா உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜெயலலிதா இருந்த போது கட்சியிலிருந்து சிவி சண்முகம் ஓரம் கட்டப்பட்ட பொழுது, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். 

ஜெயலலிதா இருந்தவரையில் மாவட்ட செயலாளராக இருந்த லட்சுமணன், அவருடைய மறைவிற்குப் பிறகு தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ் பக்கம் சென்றதால், மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சிவி சண்முகத்திடம் சசிகலாவால் வழங்கப்பட்டது. 

பின்னர் அணிகள் இணைந்த பிறகு அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், கட்சியில் அதிக முக்கியதுவம் இல்லாமல் இருந்தது. கடந்த வருடம் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் லக்ஷ்மணன் சீட்டு கேட்க, ஆனால் தலைமை சிவி சண்முகத்தின் ஆதரவுடன் முத்தமிழ் செல்வனுக்கு சீட்டை கொடுத்து வெற்றிபெற வைத்தனர். 

இந்த நிலையில், தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த லட்சுமணன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் திமுகவில் பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்த அதிமுக தலைமை, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் சமாதான பணியினை கொடுக்க, அது தோல்வியில் முடிந்ததாகவே கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former ADMK MP Lakshmanan may join DMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->