ராஜினாமா செய்கிறார் திமுக எம்.பி?.. வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை அதிமுக கூட்டணி  திமுக கூட்டணி  என இரண்டு கூட்டணிகள் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் தொகுதி பேச்சுவார்த்தை உடன்படிக்கை உள்ளிட்ட எந்தவித நடவடிக்கைகளும் தொடங்காமல் இருக்கிறது. 

தமிழகத்தில் மூன்றாவது அணி இன்று உருவாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும், திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் இன்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார்கள்.

இந்திய ஜனநாயக கட்சியின் பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போதிய எண்ணிக்கையில் திமுக சீட்டு கொடுக்காது என்பதால் புதிய கூட்டணியை அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதன்படி ரவி பச்சமுத்துவும், சரத்குமாரும் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணிக்கு நடிகர் கமலஹாசன், நடிகர் விஜயகாந்த் இருவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் முடிவுகளை சில நாட்களில் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், திமுக கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள பச்சமுத்து, சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சியின் சார்பில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தேர்தலில் கட்சியினரை தேர்தலில் களம்காண இருப்பதால், அவர் திமுக மூலமாக கிடைத்த பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது திமுக சார்பில் அவரது பொறுப்பை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுமா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP T R Paarivendhar may be Resigned Member of Parliament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal