கலவரத்தை உண்டுபண்ணிவிட்டு, பின்பு கூலாக மன்னிப்பு கேட்கும் திமுக எம்பி!  - Seithipunal
Seithipunal


திமுக எம்பி செந்தில்குமார் திட்டமிட்டு பொய் செய்தியை பரப்பி திட்டமிட்டு மதக்கலவரத்தை உருவாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பசுமைத்தாயகம் பொதுச்செயலாளர் அருள் முகநூலில் எழுதியுள்ள பதிவானது, "தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில், அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதை பயன்படுத்தி, திட்டமிட்டு மதக்கலவரத்தை திமுக கார்ப்பரேட் கூலிப்படை உருவாக்கியது.

போலிஸ் தாக்குதலுக்கு தொடர்பில்லாத ஒரு மரணத்தை, 'தடியடியில் முஸ்லிம் மரணம்' என fake news உருவாக்கி மின்னல் வேகத்தில் பரப்பினார்கள். 

அதைத் தொடர்ந்து தர்மபுரி திமுக MP செந்தில்குமார் மூலம் - ஒரு சாலை விபத்து படத்தை பதிவிட்டு, அது தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் என அப்பட்டமான கட்டுக்கதையை பரப்பினார்.

ஆனால், அது ஒரு fake படம் என அப்போதே சுட்டிக்காட்டிய பின்னர், பல மணி நேரம் கழித்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

"உண்மையை மறைக்கும் முகநூல் சதி"

திமுக MP செந்தில்குமார் பொய்செய்தியை பரப்புகிறார் - என்கிற உண்மை தகவலை நாம் முகநூலில் வெளியிட்டால் - நமது உண்மை செய்தியை முகநூல் மறைக்கிறது.. இது தற்செயலாக நடப்பது இல்லை.

இலங்கை இனப்படுகொலை கொலைக்காரன் ராஜபக்சேவின் நண்பர்கள் தான் முகநூலின் தெற்காசிய நிர்வாகத்தை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு திமுகவின் கார்ப்பரேட் கூலிப்படையினர் லஞ்சம் கொடுத்து உண்மை செய்திகளை மறைக்கின்றனர்.

நாம் ஒரு புதிய உலகில் நுழைந்துள்ளோம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் Cambridge Analytica என்ற கார்ப்பரேட் நிறுவனம் நிறைவேற்றிய அதே சதியை இங்கும் நிறைவேற்றுகிறார்கள். அந்த நாடுகளில் ஜனநாயகத்தை அழித்தார்கள். தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக மாற்றுகிறார்கள்.

இவர்களின் பணத்திற்கு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் வளைந்து கொடுக்கும் என்பதற்கு - திமுகவின் பொய்ச்செய்திகளை பரப்பும் முகநூல் அதற்கு எதிரான உண்மைகளை மறைப்பது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

திமுகவின் கார்ப்பரேட் கிரிமினல் கூட்டத்தை முறியடிக்காவிட்டால் - தமிழ்நாடு பெரும் கலவரத்தில் சிக்கி சுடுகாடாகும்." என அவர் பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP senthil Upload Fake image and apologies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->