திமுகவின் முதல் தேர்தல் வியூகத்தை, தொடக்கத்திலேயே முடித்துவைத்த இபிஎஸ்! ஏமாற்றத்தில் திமுக!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி எவ்வாறு அமையும் என்று எதிர்பார்ப்புகள்தற்போது எழுந்துள்ளது.  கடந்த வருடம்  2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி அப்படியே அமையுமா அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

2019 மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணியே தற்போது வரை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் மட்டும் அதிலிருந்து விலகியிருக்கிறது. மற்றபடி அந்தந்தக் கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கின்றன. 

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் பலமான கட்சியாக இருக்கும் பாமகவை, திமுக கூட்டணிக்கு இழுக்க வேண்டும் அல்லது பாமகவை தனியாக போட்டியிட வைக்க வேண்டும் என்பது திமுகவின் திட்டமாக இருக்கிறது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல வன்னியர்கள் வாக்குகளை பெறுவதற்காக திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றுவதும் அவர்களது திட்டத்தில் இருக்கிறது. 

இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் திமுக ஆதரவு ஊடகங்களில் அதிமுக மூத்த தலைவர்களுக்கு பாமகவின் மீது அதிருப்தி என்பது மாதிரியான செய்திகள் வர ஆரம்பித்தது. இதன்மூலம் பாமக வெளியேறலாம் அப்போது இங்கு புறக்கணிக்கப்படும் விசிக அதிமுகவுடன் சென்று சேர்ந்து விடும் என்ற கணக்கில் திமுக இருந்தது. 

இந்த நிலையில் திமுகவின் கணக்கை தவறாக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக கூட்டணியில் இருப்பதை உறுதிசெய்தார். ஜூலை 16  பாமக தொடங்கிய நாள் என்பதை அடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் தற்போது புகைச்சலை உண்டாக்கும் திமுகவின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. 

ஏற்கனவே திமுக எம்பிக்கள் ஆர் எஸ் பாரதி, தயாநிதி மாறான் தலித் மக்களுக்கு எதிராக பேசி, அதிருப்தியை பெற்றுள்ள நிலையில், விசிக வை திமுக வெளியேற்றினால் மேலும் அதிருப்தியை உண்டாக்கிவிடும் என்பதால் விசிக வை தானாகவே வெளியேற வைப்பதற்கான அடுத்த கட்ட வேலைகளில் திமுக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பாமக திமுக கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் தனியாகவாது போட்டியிட வைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Master Plan confuse in ADMK coalition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->