2021 தேர்தல் திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட்?! வெளியானது பிகே டீமின் பட்டியல்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதன் முதற்கட்டமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஐ பேக் என்ற நிறுவனத்தை 380 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றனர். 

பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ பேக் டீம் திமுகவிற்கு தீயாக வேலை செய்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தலைமையிடம் கொடுத்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. 

இந்த தகவலின்படி திமுக கூட்டணியில் திமுக 184 இடங்களில் போட்டியிடும் எனவும், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், அதற்கு அடுத்தபடியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 7 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களையும் ஒதுக்க வேண்டும் என  தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 25 சதவீத இடங்கள் ஆன 10 மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது 15 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்ற திட்டத்தினை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 8 தொகுதிகள் என்பதை ஏற்றுக்கொள்ளுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் பிரச்சனை என்றால், திமுக கூட்டணி தரப்பில் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தால் குழப்பங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. திமுக தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்தே, திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு இருக்கும் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Coalition in 2021 election seat share


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->