முதல்வர் சீட்டை விட்டுக்கொடுக்க ரூ.500 கோடி.! லீக்கானது ஓபிஎஸின் பக்கா பிளான் .! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுத்து விட்டார். 

இதனை தொடர்ந்து, அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமி தான் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல்வேறு பேரங்கள் இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றது. 

இந்த நிலையில் அதிமுக, அமமுக என்று கட்சி மாறி தற்போது திமுகவில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் அதிமுகவில் முதல்வர் பதவி வேட்பாளரை விட்டு கொடுப்பதற்காக ஓபிஎஸ் ரூபாய்.500 கோடி பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி இருக்கின்றார். இது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

முன்னதாக மகனுக்கு மந்திரி பதவி, வழிகாட்டு குழுவில் தனது ஆதரவாளர்கள் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து முதல்வர் வேட்பாளருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில், தற்போது 500 கோடி ரூபாய் வாங்கிவிட்டுத்தான் முதல்வர் பதவி வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுத்து இருப்பதாக தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்து இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. எந்த அளவுக்கு இது உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk cm candidate issue ops


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->