கல்லூரி கனவு நனவாகுமா...? கட்-ஆப் மதிப்பெண் தான் தீர்மானிக்கும்! - துல்லியமாக கணக்கிடுவது எப்படி...? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பிய பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாணவ-மாணவிகள் அடுத்தகட்ட உயர்கல்வி பயணத்திற்கான தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண் கணக்கீடு மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

உயர்கல்வி சேர்க்கைகளில் மாணவர்களின் தரவரிசையை நிர்ணயிக்கும் இந்த ‘கட் ஆப்’ முறை, 200 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.என்ஜினீயரிங் படிப்புகளான பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் கணக்கீட்டில், கணிதப் பாடத்தில் பெறப்பட்ட முழு மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் பாதிப் பங்கும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இந்த மூன்று மதிப்பெண்களின் கூட்டுத்தொகையே மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி தரவரிசையை தீர்மானிக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் வேளாண்மை படிப்புகளுக்கான ‘கட் ஆப்’ கணக்கீடு சற்று வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. உயிரியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்ணின் பாதி அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரிப் பாதி கணக்கிடப்படுகிறது.

அதனுடன் கணிதப் பாட மதிப்பெண்ணின் பாதி, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களின் கால் பங்கு மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு இறுதி ‘கட் ஆப்’ மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் கால்நடை மருத்துவப் படிப்புகளான பி.வி.எஸ்.சி., ஏ.எச். போன்றவற்றில் சேருவதற்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் கணக்கீட்டில், உயிரியல் பாடத்தின் முழு மதிப்பெண்ணும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் பாதிப் பங்கும் சேர்க்கப்படுகிறது.

அதேபோல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கும் மீன்வளப் படிப்புகளுக்கான ‘கட் ஆப்’ கணக்கீட்டில், உயிரியல் பாடம் 100 மதிப்பெண்களாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் தலா 50 மதிப்பெண்களாகவும் மாற்றிக் கணக்கிடப்பட்டு, மூன்றின் கூட்டுத்தொகை இறுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் படிப்புகளுக்கான ‘கட் ஆப்’ முறைகளை தெளிவாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப உயர்கல்வி சேர்க்கை திட்டமிடுவது அவசியம் என கல்வி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will your college dream come true cut off score decide How calculate accurately


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->