கல்லூரி மாணவர்களுக்கான வகுப்பு எப்போது? - UGC அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! 
                                    
                                    
                                   UGC released 1st year students time table released 1st year students time table
 
                                 
                               
                                
                                      
                                            மத்திய பல்கலைக்கழக மானிய குழு ஆண்டுதோறும் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தங்களின் கீழ் செயல்படும் கல்வி உரிமைகளுக்கான வகுப்பு தொடங்கும் நாள் பருவ தேர்வுகள் மற்றும் விடுமுறை நாட்கள் ஆகியவற்றை அறிவிக்கின்றனர். 
அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு கல்வியாண்டும் செயல்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கால அட்டவணையை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. 

அதன்படி ஒரு கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களும் தொழிற்சாராத படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு இளநிலை முதல்நிலை மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் வகுப்புகள் தொடங்க வேண்டும். 
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், தொழிற்சாலை படிப்புகளான மாணவர்களுக்கும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்திற்குள் கல்லூரிகள் திறக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை தயாரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       UGC released 1st year students time table released 1st year students time table