ஓர் அரிய வாய்ப்பு... நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

நடைபெறும் இடம்:

கரூர் கலெக்டர் அலுவலகம்

கல்வி தகுதி:

8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை, ஜ.டி.ஜ., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்த மாற்றுத்திறனாளிகள்.

இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணிநியமன உத்தரவு வழங்கப்படவுள்ளது. 

மேலும், இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி்கான பதிவும் செய்யப்படுகிறது. எனவே, இந்த வேலை வாய்ப்பு முகாமில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Employment camp for differently abled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->