வேளாண் துறையில் TNPSC வெளியிட்ட ரிசல்ட்.. உடனே செக் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வேளாண்மை விரிவாக்கப் பணியில் வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் பதவிகள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணியில் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 159 பணியிடங்களுக்கான கனிய வழி தேர்வை கடந்த ஆண்டு மே மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தியது. 

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற வேளாண் உதவி இயக்குனர் பதவிக்கு 45 பேரும், வேளாண் அலுவலர் பதவிக்கு 15 பேரும், வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர் பதவிக்கு 4 பேரும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 176 பேரும் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் மதிப்பெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வுகள் தங்கள் மதிப்பெண்ணை www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpsc announced agriculture dept job results


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->