போக்குவரத்து துறையில் 807 காலி பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கீழ் செயல்படும் போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மொத்தம் 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களையும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கான கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காலி பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் முறையில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் நிரப்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt ordinance issued to fill 807 vacant Posts in transport department


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->