ரூ.20,000 சம்பளத்தில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் பணி..!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கான செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் "தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் நான்காயிரம் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியிடங்கள் தவிர மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணவர்களின் நலன் கருதி அரசு கல்லூரிகளில் முதன்மையான கல்வி சூழல் நிலவுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 கல்வியாண்டிற்கு கௌரவ வெளிநாடுகளை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.

இ காலி பணியிடங்களுக்கு கௌரவிளர்களை தெரிவு செய்வதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதல் நெறிமுறையின் படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுனர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணி நாடுனர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று(டிச.15) மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் சேர தகுதி பெற்ற பணி நாடுனர்கள் இன்று (15/12/2022) முதல் 29/12/2022 வரை பதிவு செய்யலாம்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணி நாடுனர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த கௌரவ விரைவுவையாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.20,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt New Notification for 1895 Honorary Lecturers at a salary of Rs20000


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->