நாளை மறுநாள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு ? - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடப்பு ஆண்டில்  ஜூன் மாதம்  9-ம் தேதி நடைபெற்றது.

இதில் தேர்வு எழுத 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும், டி.என்.பி.எஸ்.சி அதிகார பூர்வ இணையதளம் மூலமாக தேர்வர்கள் சென்று தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The day after tomorrow group 4 exam results will be released tamil nadu public service commission information


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->