ஜாலி ஜாலி!!! மாணவ- மாணவிகள் 93.80 % தேர்ச்சி...! SSLC பொது தேர்வு முடிவுகள்...! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை, தமிழ்நாடு முழுவதும் SSLC பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்தப் பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வருகிற மே-19-ந்தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால்,விரைவாக 3 தினங்களுக்கு முன்பாகவே அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அவ்வகையில், இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் ''அன்பழகனார்'' கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.

மேலும்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 %மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில், வழக்கம்போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் குறிப்பாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.74%, மாணவிகள் 95.88 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்தத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அரசு தேர்வுத்துறை, மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students pass 93point80 percentage SSLC Public Exam Results


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->