சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு...! 1.08 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இடைநிலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்களில் 47,628 பேரும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களில் 61,153 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்குச் சிறப்புத் தகுதித்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது.இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூலை 4-ஆம் தேதியும், உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூலை 5-ஆம் தேதியும் நடைபெற்றது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மொத்தம் 833 தேர்வு மையங்களில் சிறப்புத் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் முதல் தாள் தேர்வு 221 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு 612 மையங்களிலும் நடைபெற்றது.முதல் தாள் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வை மொத்தம் 59,535 பேர் எழுதினர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வில் 1,60,929 பேர் கலந்துகொண்டனர்.தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை எழுதிய 1,60,929 பேரில் 61,153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் பங்கேற்ற 59,535 பேரில் 47,628 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதன் மூலம், இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 1,08,781 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special Teacher Eligibility Test results released 1point08 lakh candidates pass amazing


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->