மாதம் ரூ.48,480 சம்பளம்! ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வட்டார அலுவலர் பணி!
SBI Bank CBO job
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்டார அலுவலர் (CBO) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,964 பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் 120 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29, 2025
விண்ணப்ப முறை: ஆன்லைன் (https://sbi.co.in)
பணி: வட்டார அலுவலர் (Circle Based Officers)
சம்பளம்: மாதம் ரூ.48,480
தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை அல்லது இணைந்த இரட்டைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கணக்கியல், பட்டயக் கணக்கியல் உள்ளிட்ட துறைகளும் உட்படுகிறது.
பணி அனுபவம்:
வணிக வங்கிகள் அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் தேவை. மேலும், விண்ணப்பிக்க விரும்பும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
தேர்வு மையங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் – கட்டணம் இல்லை
மற்றோர் – ரூ.750 (ஆன்லைனில் செலுத்த வேண்டும்)