வேலையில்லாத இளைஞர்களுக்கு., மாதம் 600 ரூபாய் உதவித்தொகை.! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது, "தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300,பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு (பொறியியல் போன்ற தொழிற் கல்வி நீங்கலாக) மாதம் ரூ.600 வீதம், 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ -மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.

எனினும் தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து கல்வி சான்றிதழ் வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் உதவித்தொகை கோரும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்புத்துறை இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்." என்று அந்த அறிவிப்பில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramanadhapuram collector announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->