பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம் - நடந்தது என்ன?
plus 2 exam result date change
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதிய இந்தத் தேர்வுகள் மார்ச் மாதம் 25-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தபட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாக மே மாதம் 8-ந் தேதி அதாவது நாளை மறுநாள் காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை தெரிவித்துள்ளதாவது:- "என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளை (7-ந்தேதி) தொடங்க இருக்கும் நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
plus 2 exam result date change