நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்க.! - Seithipunal
Seithipunal


எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கவுள்ளது. 

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகும் மாணவர்கள் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தின் மூலமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் https://ntaneet.nic.in/  இந்த இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். 

தேர்வுக்கு விண்ணப்பிக்கு மாணவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்து இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1,500 ரூபாயையும், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 1,400 ரூபாயையும், பட்டியலினத்தவருக்கு 800 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கப்படும். நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் செலுத்த வரும் ஜனவரி 1 ஆம் தேதி கடைசி நாள்.

இந்த நீட் தேர்வானது வரும் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம்  தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் 27ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4ம் தேதி வெளியாகும் என  நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet exam announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->