ஐடிஐ படித்தவர்கள் சாலை ஆய்வாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சாலை ஆய்வாளர் பணிக்கு, ஐடிஐ படித்தவ மாணவர்கள் தான் தகுதியானவர்கள் என சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தைச், சேர்ந்த இளங்கோவன் ஆகிய இருவரும் இணைந்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது; கடந்த ஜனவரி மாதம், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறைக்கு கீழ் உள்ள, மொத்தம் 761 சாலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை, நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான ஆணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.தமிழக அரசின் சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிவில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் தான்  இந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.ஐடிஐ படித்த மாணவர்களுக்கு சாலை ஆய்வாளர் பணியை வழங்க உறுதிப்படுத்தவும், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை முற்றிலும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மனுவை மேற்கொண்டு விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு;  டிஎன்பிஎஸ்சி முன்னுரிமை அளித்துள்ள டிப்ளமோ இன்ஜினியரிங் குறித்த விவகாரத்தில் அதிகப்படியான முரண்பாடுகள் உள்ளது.ஆகவே, இதை கருத்தில் கொண்டு, சாலை ஆய்வாளர் வேலைக்கு கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ படித்து சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் தான் தகுதியானவர்கள் என அவர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படுகிறது, என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். சாலை ஆய்வாளர் பணி நியமனத்தை பொறுத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ முடித்ததற்கான சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITI Graduates Can Apply For Road Inspector Jobs High Court Orders


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->