₹48,480 சம்பளம்! நாளை தான் கடைசி! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 லோகல் வங்கி அலுவலர் வேலைவாய்ப்பு!
IOB Local Bank Officer Job may 31
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Local Bank Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான தகவல்கள்:
விண்ணப்ப எண்: HRDD/RECT/01/2025-26
மொத்த காலியிடங்கள்: 400
சம்பள வரம்பு: மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. தேர்வு செய்யப்பட்ட மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.05.2025 அன்றுக்குள் 20 முதல் 30 வயதுக்குள்.இருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டு தளர்வு
ஓபிசி: 3 ஆண்டு தளர்வு
மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
நுழைவுச்சீட்டு விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி: ₹175
பிற பிரிவினர்: ₹850
கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்
தேர்வு மையங்கள் (தமிழ்நாடு):
சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், கடலூர், சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், வேலூர்
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.iob.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025
English Summary
IOB Local Bank Officer Job may 31