குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில், 5 ஆயிரத்து 413 பணியிடங்கள் இருந்தன. இதற்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. 

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

group 2 and 2A posting vacancis increased


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->