10, 12, ITI பாஸ்ஸா.? தென்னக இரயில்வேயில் 2,860 அப்ரண்டீஸ் வேலை.‌. முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தென்னக ரயில்வேக்கு உட்பட்ட கோயம்புத்தூர் பெரம்பூர் திருவனந்தபுரம் பாலக்காடு சேலம் அரக்கோணம் சென்னை திருச்சி மதுரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள 2860 தற்காலிக பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 15 வயதில் இருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழில் பயிற்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் உயிரியல் படித்தவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணுடன் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் https://sr.indian railways.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2860 apprentice opening in southern railways


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->