12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுமா?! வெளியாகிறது முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் மே 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, பொதுத் தேர்வை தள்ளிவைக்கலாமா என்று, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

இதற்கிடையே, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளில் மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த பொது தேர்வை தள்ளி வைக்கலாமா என்று, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

சற்றுமுன், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின், திட்டமிட்டபடி பொதுத் தேர்வை நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th exam issue april 8


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal