போதைப்பொருள் வலையில் இளைஞர்கள்…4 கோடி மதிப்பிலான எம்.டி. சிக்கியது...! - தானேவில் காவலர்கள் அதிரடி
Youths caught drug snares MD worth Rs 4 crores caught Thane police take action
மும்பை அருகிலுள்ள தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எம்.டி.என்.எல். அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் பெருமளவு போதைப்பொருள் வர்த்தகம் நடைபெற உள்ளதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ நாளில் அந்த பகுதியில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஒவ்வொரு அசைவையும் கூர்மையாக கவனித்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து சோதனை நடத்திய காவலர்கள், அவர்களிடமிருந்து 2.6 கிலோ எம்.டி. எனப்படும் உயர் தர போதைப்பொருளை கைப்பற்றினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், கோப்ரி பகுதியைச் சேர்ந்த சோகைல் கான் (26) மற்றும் உல்லாஸ்நகரைச் சேர்ந்த ரோகித் (21) ஆகியோர் இதில் தொடர்புடையவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
உடனடியாக இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய காவலர்கள், இந்த போதைப்பொருளை கோப்ரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வழங்கியதாக கண்டறிந்தனர்.
இதையடுத்து அவரையும் விரைவாக கைது செய்து, அவரிடமிருந்தும் மேலும் 2.6 கிலோ எம்.டி. போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவங்களின் மூலம் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Youths caught drug snares MD worth Rs 4 crores caught Thane police take action