சோளிங்கர் அருகே 10 வகுப்பு மாணவி கொலை வழக்கு: ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


நேற்றைய தினம் ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் ஜனனி என்ற மாணவி மர்ம நபர் ஒருவரால் வீடு புகுந்து குத்தி கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் குத்தி கொலை செய்துவிட்டு ஒருதலை காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய ஜெகத்குமார். கார்பெண்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி பிரியா 35 வயது. இந்த தம்பதிகளுக்கு மகன் கார்த்திக் (17), மகள் ஜனனி (15) இருவர் உள்ளனர்.

குறித்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் பிரியா திருத்தணி அருகே தனது தாய் வீட்டில் மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறார். அங்குள்ள பள்ளியில் கார்த்திக் பிளஸ் 02 தேர்ச்சி பெற்றார். ஜனனி 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக தந்தையை பார்க்க வந்த ஜனனி கடந்த ஒரு மாதமாக புலிவலம் கிராமத்திலேயே தங்கியிருந்துள்ளார். ஜெகத்குமாரின் அக்கா, மகள்கள் லக்‌ஷயா (16), சரண்யா (11) ஆகியோருடன் புலிவலம் வந்துள்ளார்.

நேற்று மாலை ஜகத்குமாரின் அக்கா அவரது இளையமகள் சரண்யாவும் வீட்டு வெளியே அமர்ந்திருந்த போது, பின்பக்க வாசல் வழியாக கத்தியுடன் திடீரென வீட்டுக்குள் ஒரு வாலிபர் நுழைந்து, அங்கு அறையில் இருந்த ஜனனியை கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். அத்துடன், இதில் வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியத்தில் ஜனனி கதறியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லக்‌ஷயா அந்த வாலிபரை தடுக்க முயன்தில், அந்த வாலிபர் அந்த சிறுமியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கூச்சலிட்டபடியே லக்‌ஷயா வீட்டின் வெளியே ஓடிவந்துள்ளார்.

அப்போது அந்த வாலிபர் முன்பக்க கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, ஜனனியை மீண்டும் கத்தியால் சரமாரி குத்தியுள்ளத்தோடு, தனக்கு தானே கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

லக்‌ஷயாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜனனி  ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற வாலிபரை அக்கம் பக்கத்தினர் சரமாரி அடித்து உதைத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் மற்றும் கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த லக்‌ஷயா மற்றும் தோடு, ஜனனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இந்த கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மாணவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணி, 21 வயது என தெரியவந்துள்ளது. இவர் கே.ஜி.கண்டிகையில் ஜனனி வசிக்கும் வீட்டின் அருகே வசித்து வருபவர்.

இவர் அடிக்கடி ஜனனியை பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையறிந்த ஜனனியின் தாய் பிரியா, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். அத்துடன், ஜனனியும் அந்த வாலிபரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது காதலை ஏற்க மறுத்த ஜனனியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து, புலிவலம் கிராமத்தில் உள்ள தந்தையின் வீட்டில் ஜனனி தங்கியிருப்பதை அறிந்த சுப்பிரமணி, நேற்று கத்தியுடன் வந்து குத்தி கொலை செய்துள்ளார். தற்போது சுப்பிரமணி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் அவருக்கு மயக்கம் தெளிந்த பின்னரே விசாரணை நடத்த முடியும் என்றும், விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the murder case of a 10th grade student near Sholingar a young man committed a violent act due to one sided love


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->