வாரிசு படத்தில் குடும்ப செண்டிமெண்ட் ஏன்.? விஜய் எடுத்த அதிரடி முடிவுக்கு காரணம்.!
Why Vijay Choose family sentiment
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் வாரிசு என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கிவருகிறார்.
இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பிறகு சென்னை கானாத்தூர் அருகில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,இந்த படத்தில் நடிகர் விஜய் குடும்ப சென்டிமென்ட் கதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் வெளியாகியுள்ளது.
அவர் குடும்ப கதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தெலுங்கு ரசிகர்களுக்கு பெரும்பாலும் இது போன்ற படங்கள்தான் பிடிக்கும் என்பதுதான். அத்துடன், ஏற்கனவே நிறைய ஆக்ஷன் படங்கள் எடுத்து விட்டதால் ஃபேமிலி ரசிகர்களை இழப்பது போன்ற தோற்றம் ஏற்ப்பட்டுள்ளதாம். எனவே, அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Why Vijay Choose family sentiment