அடக்கொடுமையே.! ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிடமிருந்து பிரிந்ததற்கு இதுதான் காரணமா.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் இரண்டு இசை ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கிய இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகறிய செய்தவர் ஏ ஆர் ரகுமான்.

முதல் இந்திய இசையமைப்பாளராக கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்றவர் ஏ ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இளையராஜாவுடன் பணியாற்றி இருக்கிறார். 500 படங்களுக்கு மேல் இளையராஜாவிற்கு உதவியாளராக இருந்து இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் ஏன் இளையராஜாவிடமிருந்து பிரிந்து வந்தார் என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சில நாட்களுக்கு முன்பு யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான் வெளிநாட்டிலிருந்து நவீன இசை கருவி ஒன்றை வாங்கி இருந்தார். அந்த இசைக்கருவி இந்தியாவிற்கு வந்தபோது இளையராஜா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் அதை முடக்கி வைத்தார் என கூறியிருந்தார். இந்தப் பேட்டி அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது .

எம் எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரகுமான் மற்றும் இளையராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய சங்கர் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிருபர் ஏன் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடமிருந்து விலகினார் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த சங்கர், ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது கீபோர்டு அட்டாச்மென்ட் ஒன்றை வெளிநாட்டிலிருந்து வாங்கியிருந்தார்.

அதனை கஸ்டம்ஸிலிருந்து எடுப்பதற்காக மிகப்பெரிய தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அப்போது ரஹ்மான் இளையராஜாவின் உதவியை நாடி அவருடைய செல்வாக்கு பயன்படுத்தி அதை வாங்கித் தருமாறு கூறினார். ஆனால் இளையராஜா தன்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்றும் இனி தன்னிடம் வந்து இது போன்ற உதவிகளை கேட்கக்கூடாது எனவும் கூறிவிட்டார். உன்னால் முடிந்தால் அதை நீ எடுத்துக் கொள் என தெரிவித்திருக்கிறார். அதற்கு அடுத்த நாளிலிருந்து தான் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடம் வேலை செய்வதை நிறுத்தினார் என கூறியிருக்கிறார் சங்கர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why ar rahman part away with illayaraja a cose associate elaborate the incident


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->