ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது?மௌனம் கலைத்த ராஷ்மிகா!
When is Rashmika Vijay Deverakonda wedding Rashmika breaks her silence
தெலுங்குத் திரையுலகின் மிகப் பிரபல காதல் ஜோடியாக மாறியிருக்கும் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி குறித்து திருமணச் செய்திகள் சூடுபிடித்து வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் என பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இதுவரை இந்த இருவரும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வழங்கவில்லை.
விஜய் – ராஷ்மிகா ஏழு வருடங்களாக காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இருவரும் அக்டோபர் மாதத்தில் ஹைதராபாத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக, விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக செய்திகள் வந்தன. எனினும், ராஷ்மிகாவும் விஜயும் இதுபற்றி மௌனமாகவே உள்ளனர்.
சில நாட்களாக, இந்த ஜோடி உதய்பூரில் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டதாகவும், இரு குடும்பங்களும் திருமணம் நடைபெறும் இடத்தை இறுதி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதிலும் அதிகாரப்பூர்வ உறுதியான தகவல் இல்லை.
சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகாவிடம் அவரது திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,“ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் என் திருமணம் பற்றி பேசுவதற்கு முன் எனக்கு நேரம் வேண்டும். அதை இப்போது உறுதிப்படுத்தவோ மறுக்கவோ விரும்பவில்லை”என்று கூறியுள்ளார்.
அதாவது, திருமணம் குறித்த பேச்சுகளை அவர் மறுத்தும் விடவில்லை; உறுதிப்படுத்தியும் விடவில்லை. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் உய்ந்துள்ளது.
2018 இல் கீதா கோவிந்தம், 2019 இல் டியர் காம்ரேட் படங்களில் இணைந்து நடித்த இருவருக்கும் அப்போதே நெருக்கம் அதிகரித்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்களின் டேட்டிங் செய்திகள் இணையத்தில் அடிக்கடி பேசப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்ற தி கேர்ள்ஃபிரண்ட் பட வெற்றி விழாவில் ராஷ்மிகா, விஜயை பற்றி உணர்ச்சிவசப்பட்டு,“ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விஜய் தேவரகொண்டா போன்ற ஒருவர் இருப்பது ஒரு ஆசீர்வாதம்”என்று பாராட்டியதும், இவர்களின் உறவுக் குறித்த வதந்திகளை மேலும் வலுப்படுத்தியது.
ராஷ்மிகா – விஜய் திருமணம் நடக்கப்போகிறதா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் ராஷ்மிகாவின் சமீபத்திய பதில், “விரைவில் ஒரு அறிவிப்பு வரலாம்” என ரசிகர்களை நம்ப வைத்திருக்கிறது.
English Summary
When is Rashmika Vijay Deverakonda wedding Rashmika breaks her silence