“விடிவி கணேஷ் பயங்கர கேடி!” விடிவி கணேஷூக்கு ஆந்திராவுல பல பங்களா இருக்கு – டீசர் விழாவில் கலகலப்பாக பேசிய விஜய் சேதுபதி - Seithipunal
Seithipunal


இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தனது நகைச்சுவை கலந்த பேச்சால் ரசிகர்களையும் ஊடகங்களையும் கவர்ந்தார்.

விழாவில் பேசிய அவர், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் துனியா விஜய் குறித்து பாராட்டிப் பேசினார்.“பூரி ஜெகந்நாத் மீது உள்ள நட்பும் மரியாதையும் காரணமாக துனியா விஜய் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சொல்வதை அப்படியே உள்வாங்கி திரையில் வெளிப்படுத்தும் திறமையான கலைஞர். சில காரணங்களால் அவர் இன்று வர முடியவில்லை. இந்த மேடையிலேயே அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பின்னர் நடிகர் விடிவி கணேஷ் குறித்து பேசிய விஜய் சேதுபதி, அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தினார்.“விடிவி கணேஷ் அண்ணாவை நேரில் சந்திப்பதற்கு முன் அவர் பற்றி ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பிறகு அது மாறிவிட்டது. பார்க்க ரொம்ப இன்னசென்ட் மாதிரி இருப்பார். ஆனால் பயங்கரமான கேடித்தனமான நடிகர். நடிப்பில் கில்லாடி,” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும்,“இப்போது தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் தான் அதிகமாக நடிக்கிறார். ஆந்திராவில் ஏகப்பட்ட பங்களாக்களையும் வாங்கியிருக்கிறார். பத்திரிகையாளர்களே, இதை மறக்காமல் செய்தியாக எழுதுங்கள்,”என்று சிரிப்புடன் கூறியதால் நிகழ்ச்சி அரங்கம் முழுவதும் கைதட்டல்களும் சிரிப்பும் ஒலித்தன.

படத்தின் தயாரிப்பாளரும் முன்னாள் நடிகையுமான சார்மி கவுர் குறித்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் பேசினார்.“சார்மி மேடம் வீட்டுக்குப் போனால் சாப்பிடாமல் திரும்ப முடியாது. யார் சென்றாலும் அன்பாக உணவு பரிமாறுவார். தெலுங்கு படங்களின் பிரம்மாண்டம் போலவே அவர் வைக்கும் விருந்தும் பிரம்மாண்டமாக இருக்கும்,”என்று பாராட்டினார்.

படம் குறித்த தகவல்களைவிட, விஜய் சேதுபதியின் இயல்பான நகைச்சுவை கலந்த பேச்சுகளே டீசர் வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சமாக மாறின. குறிப்பாக விடிவி கணேஷை கலாய்த்த விதமும், சார்மி கவுரின் விருந்தோம்பலைப் பாராட்டிய விதமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VTV Ganesh has many bungalows in Andhra Pradesh Vijay Sethupathi spoke animatedly at the teaser event


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->