''ரஜினி சார் தைரியம் யாருக்கும் வராது''-  விஷ்ணு விஷால் புகழாரம்! 
                                    
                                    
                                   Vishnu Vishal speech goes viral
 
                                 
                               
                                
                                      
                                            ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''லால் சலாம்''. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால், நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். நான் லால் சலாம் படம் பார்த்தது தெரிந்ததும் ரஜினிகாந்த் சார் என்னை பேச அழைத்தார். 
அவருடன் படம் செய்ததற்கு ஒரு ரசிகனாக பெருமைப்படுகிறேன். இந்த தைரியம் யாருக்கு வராது. ரஜினி சார் படம் என்றாலே விசில் அடிக்க கை தட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 
அது எல்லாமே இந்த படத்தில் அளவாக இருக்கிறது. யாரும் அதை மிஸ் பண்ண மாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு ரஜினி சாருக்கு தலைவணங்குகிறேன் என்றார். 
                                     
                                 
                   
                       English Summary
                       Vishnu Vishal speech goes viral