ரஜினி பர்த்டேக்கு விஜய் வைத்த ட்ரீட்.. கொண்டாட ரெடியா புள்ளிங்களா..?
vijay treat for fans on rajini birthday
ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி இருக்கிறார். மேலும், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது.
தீபாவளிக்கு தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பிகில். 300 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தி பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனையை படைத்தது.

பிகில் படம் அமேசானில் நாளை வெளியாக இருப்பதாக முன்பு ஒரு செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் வந்திருக்கிறது. இன்று சூப்பர்ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு, பிகில் திரைப்படம் அமேசான் ப்ரைம் விடீயோவிலும் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
விஜய்யின் பிகில் படம் இந்த வருட தீபாவளிக்கு மாஸாக வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் மாஸ் காட்டாமல் ,ஆந்திரா மற்றும் கேரளா, கர்நாடகா என்று தளபதி மாஸ் காட்டிவிட்டார்.
English Summary
vijay treat for fans on rajini birthday