எச்.வினோத் இயக்கத்தில், நடிக்கவுள்ள பிரபல நடிகர்.?! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸ என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகிய கடைசி விவசாயி சமீபத்தில் ரிலீசானது. 

மேலும், அவரது மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகின்றார். அதுபோல வினோத்தும் அஜித்குமாரின் Ak 61 படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரும் இணைந்து அடுத்த படத்திற்கான வேலையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi act h Vinoth movie


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal