விஜய் தேவர் கொண்டாவிற்கு ஜோடியாக இணையும் பிரபல தெலுங்கு நடிகை.! - Seithipunal
Seithipunal


விஜய் தேவர் கொண்டாவிற்கு ஜோடியாக இணையும் பிரபல தெலுங்கு நடிகை.!

தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழ் சினிமாவில் ’கீத கோவிந்தம்’, ’சர்க்காரு வாரிபட்டா’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் புதுப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. அப்போது, தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கிளாப் அடிக்க, கோவர்தன் ராவ் தேவரகொண்டா முதல் காட்சியை இயக்க, பிரபல பைனான்சியர் சத்தி ரங்கய்யா கேமிராவில் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில், ’சீதாராமம்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான மிருணாள் தாக்கூர் விஜய் தேவர் கொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளர்களான தில் ராஜூ மற்றும் சிரிஷுடன் கைகோர்த்துள்ளார். இது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸின் 54-வது தயாரிப்பாகும். மேலும், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த #VD13 திரைப்படம் உருவாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay devar konda and mirunal thakur movie poojai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->