விஜய் ஆண்டனியின் "ரத்தம்" திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவா நடிப்பில் வெளியான "தமிழ்படம்" திரைப்படத்தை யாராலும் மறந்து இருக்க முடியாது. அந்த படத்தில் ஒட்டுமொத்த திரையுலகம் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரையும் இயக்குனர் சி.எஸ் அமுதன் நடிகர் சிவாவை வைத்து கலாய்த்து இருப்பார். இவருடைய இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடத்துள்ள ரத்தம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதேபோன்று ஜெகன் கிருஷ்ணா, நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் உள்ளிட்டோரும் நடித்த கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் கண்ணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த டீசரில் வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றிருந்தனர்.

மக்கள் மத்தியில் ரத்தம் திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தம் திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "எச்சரிக்கை, வரும் செப்டம்பர் 28, தமிழ் நாட்டுக்கு ரத்தம் வரப்போது" என ரத்தம் திரைப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதை வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antony Ratham movie release on September 28


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->