நடிகராக களமிறங்கும் இயக்குனர் வெற்றிமாறன்: எந்த படம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ட்ரெயின்'. ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்கிறார். 

இந்த திரைப்படத்தில் நாசர், வினைராய், பாவனா, சம்பத் ராஜ், கே.எஸ். ரவிக்குமார், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது, இந்த திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செய்தி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vetrimaran acting new movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->