அட்வக்கெட்டாக அட்டாக் செய்யும்.. வரலட்சுமி சரத்குமார்.! சண்டை காட்சிகளில் அசத்தவுள்ள புதிய படம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது சூர்யா கிரண் இயக்குனரின் தயாரிப்பில் அரசி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தில் இவருடன் கார்த்திக் ராஜு, அங்கனா ராய் மற்றும் மனிஷா ஜஸ்னானி உள்ளிட்டு வரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வக்கீல், போலீஸ் அதிகாரி மற்றும் ரவுடி ஆகிய மூன்று பேருக்குமிடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சூர்யா கிரண் இயக்கியிருக்கிறார். இத்தனை படத்தில் வரலட்சுமி  வழக்கறிஞராக நடித்திருக்கிறார். வி.வி பிலிம்ஸ் மற்றும் ரசி மீடியா சார்பில்  ஏ.ஆர்.கே ராஜாராஜா மற்றும் ஆவடி கே வரலட்சுமி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளனர். திரைப்படத்திற்கு செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இதற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பாடல்களை  ஆவடி.கே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா ஆகியோர் எழுதியுள்ளனர். திரைப்படத்திற்கு நடன இயக்குனராக தீனாவும், ஸ்டண்ட் மாஸ்டராக  மிரட்டல் செல்வாவும் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும்  மிகவும் அற்புதமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த 55  நாட்களாக  சென்னை மற்றும் வேலூரில்  படமாக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் வேலூர்  கல்லூரிகளில்  புறப்படமாக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் வரலட்சுமி சரத்குமார் புதிய பரிணாமத்தை காட்டியிருப்பதாகவும்  சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varalakshmi sarath kumar done the role of a lawyer in his upoming film arasi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->