காதலர் தினத்தில் வைரமுத்துவின் கவிதை பதிவு…! - ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட வார்த்தைகள்!
Vairamuthu poem Valentine Day Words that captivated fans
உலகம் முழுவதும் இன்று காதலர் தினக் கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், அன்பும் உணர்வுகளும் கலந்த இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில் மனதை தொடும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,''
காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு மட்டும்
சம்பந்தப்பட்டதில்லை
எல்லா நிலைகளிலும்
எல்லா வயதினிலும்
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

'பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே' என்று
சங்கத் தலைவி பாடுமிடத்து
உடற்புணர்ச்சி காதலாகிறது
'காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி'
என்று பாடும்பொழுது
கடவுள் பக்தி காதலாகிறது
'காதல் திருமகன்' என்று
தசரதன் தளும்புகிறபோது
பாசம் காதலாகிறது
உதடுகளை மாற்றி மாற்றி
முத்தங்கள் பயணப்படுவதுபோல்
இதயங்களை மாற்றி மாற்றிக்
காதல் பயணப்படுகிறது
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல
இடம் பெயரும்
உயிர்கள் உள்ளவரை
காதல் இருக்கும்
உடலோடு தொடங்கி
உடல் தாண்டி
உயிரில் ஐக்கியமாகிறபொழுது
காதல் தன் புனிதயாத்திரையில்
பூரணம் பெறுகிறது
எல்லாக் காதலுக்கும்
இது நேர்வதில்லை
இன்று விற்பனையாகும்
250 மில்லியன் ரோஜாக்களும்
குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள்
பூக்கவே பூக்கும்;
ஆனாலும் காதல்
மலரவே மலரும்
காதலைத் தடுக்க
நாம் யார்?
தானாய்த் தோன்றித்
தானாய் மறையும்
சந்திர சூரியர்
போன்றது காதல்
வாழ்க காதலே;
பூமியை வாழவை..!
காதலின் அர்த்தம், மனித உறவுகளின் ஆழம் மற்றும் வாழ்க்கையின் நெகிழ்ச்சியான தருணங்களை கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அவரது அந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
English Summary
Vairamuthu poem Valentine Day Words that captivated fans