மீரா மிதுனை இதை விட கேவலப்படுத்த முடியாது.! வச்சி செய்த வைரமுத்து.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நடிகையான மீரா மிதுன், கடந்த சில நாட்களாகவே பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மீது மோசமான விமர்சனங்களை கொட்டி வருகின்றார். அவருடைய ஒவ்வொரு ட்வீட்டிலும் ஒவ்வொரு பிரபலத்தை வம்புக்கிழுத்து, படுகேவலமான விமர்சனங்களை அவர்கள் மீது திணித்து வருகின்றார். 

இந்த விமர்சனங்களுக்கு விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கண்டனங்களை தெரிவித்து இருந்தார். மேலும், திரையுலக சங்கங்கள் இது குறித்து கேள்வி எழுப்புவது ஏன் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி  ரசிகர்கள் தங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நாகரிகமாக சூர்யா ஒரு ட்ரீட் போட்டு பதிலளித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

"சுமத்தப்பட்ட பழியின்மீது

சூர்யாவின் அணுகுமுறை நன்று.

பக்குவப்பட்டவர்கள்

பதற்றமுறுவதில்லை;

பாராட்டுகிறேன்.

நதியோடு போகும் நுரையோடு

கரை கைகலப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vairamuththu tweet about meeramitun and surya issue 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->