வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்!
Vadivelu movie update
நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மலையாள இயக்குனர் சுதீஷ் ஷங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில்-வடிவேலு இணைந்து நடிக்கின்றனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். காமெடி காட்சிகளாக இருக்கும் இந்த திரைப்படத்தை கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தலைப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்திற்கு ''மாரீசன்'' என பட குழு தலைப்பு வைத்துள்ளது.
மேலும் இது குறித்த போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அதில், 'இன்னைக்கு வேட்டை ஆரம்பம்' என குறிப்பிட்டு மான் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.