கமலின் உத்தம வில்லன் " அட்டர் பிளாப் ".. உண்மையை உடைத்த தயாரிப்பாளர் லிங்குசாமி.!!
Uttama villain movie flop lingaswamy statement
தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனாக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆனந்தன் திரைப்படம் வசூல்ரீதியாக பெரிய வெற்றி பெற்றதை அடுத்து லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா போன்ற திரைப்படங்களில் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தில், தீபாவளி, வேட்டை, கும்கி, சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் லிங்கசாமி.
![](https://img.seithipunal.com/media/Picsart_24-04-18_15-45-13-886-yqwmn.jpg)
சமீபத்தில் தனியார் யூ-டுப் சேனலில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படம் வெற்றிப்படம் என்று கூறியதை அடுத்து, இயக்குனர் லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உத்தமவில்லன் படத்தை முதல் பிரதி என்ற அடிப்படையில் தயாரித்தோம். உத்தமவில்லன் திரைப்படம் எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பணம் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை இது கமலுக்கும் தெரியும். உத்தம வில்லன் படம் பிலாப் படமே. சமூக வலைதளங்களில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
English Summary
Uttama villain movie flop lingaswamy statement