இன்று தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பிறந்த தினம்... யார் இவர்? - Seithipunal
Seithipunal


டி.எஸ்.பாலையா:

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி தன்னுடைய 57வது வயதில் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TS balaiah birthday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->