இன்று முதல்.. திரையரங்குகளில் வெளியான வெற்றிமாறனின் விடுதலை.! - Seithipunal
Seithipunal


எல்ராட் குமார் தயாரிபில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சூரி முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி "வாத்தியார்" என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்ட பாளை முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் "விடுதலை" திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

இதற்கு முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன், லாக்கப் என்ற நாவலை தழுவி "விசாரணை" திரைப்படத்தை எடுத்தார். அதே போல் வெக்கை நாவலை தழுவி, "அசுரன்" திரைப்படத் எடுத்திருந்தார். அந்த இரண்டு படத்திற்கும் தேசிய விருது மற்றும் சர்வதேச விருதுகள் கிடைத்தன.

அதேபோல், அவர், துணைவன் நாவலை தழுவி "விடுதலை" திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதனால் அசுரன், விசாரணை போல் இந்த விடுதலை படமும் தேசிய விருதை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வண்ணம் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today viduthalai movie release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->