இன்று முதல்... தனுஷ் எழுதிய "வா வாத்தி" பாடல்.!  
                                    
                                    
                                   today vaththi movie first song release 
 
                                 
                               
                                
                                      
                                            பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள 'வாத்தி' திரைப்படத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். 
நேரடியாக தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள இந்தப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில், இன்று 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடலான 'வா வாத்தி' பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் எழுதிய இந்த பாடலை பாடகர் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். காதல் பாடலாக அமைந்த இந்த பாடல் அனைவறையும் கவர்ந்து, அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் aduththa மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       today vaththi movie first song release