இன்று நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் தனது விடா முயற்சியாலும் திறமையாலும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். 

அவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. நாளுக்கு நாள் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இத்தகைய நிலையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஏஜன்ட் கண்ணாயிரம்' திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது  'கிக்' என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புகள் சென்னை, பாங்காங், லண்டன் என பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சந்தானம் இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'கிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Santhanam birthday kick movie trailer released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->