'துணிவு' படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த நடிகை மஞ்சு வாரியர்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின்  போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்லா வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதனை நடிகை மஞ்சு வாரியார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்திற்குத் டப்பிங் செய்யும் புகைப்படத்தைப் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu movie dubbing studio photos


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->